28 Nov 2026

இடது கை பழக்கம் கொண்டவர்களா நீங்கள்?

Credit: GETTY

உலகில் பெரும்பாலானோர் வலது கையை பயன்படுத்தும் நிலையில், இடது கை பழக்கம் கொண்டவர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இது அவர்களின் இயல்பான உடல் வேறுபாடுகளில் ஒன்றாகும்.

தனித்துவம்

இடது கை பழக்கம் உள்ளவர்களின் மூளையில் மொழி மற்றும் இயக்கம் தொடர்பான செயல்பாடுகள் சிலருக்கு இரு மூளை பகுதிகளிலும் பரவியிருக்கலாம். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் மூளை செயல்பாடு மாறுபடும்.

மூளை

டென்னிஸ், பாக்சிங், வாள்வீச்சு போன்ற போட்டிகளில் இடது கை வீரர்களுக்கு சில நேரங்களில் சாதகமான சூழல் அமையும். எதிரணி வீரர்கள் இடது கை ஆட்ட முறை பழக்கமில்லாததே இதற்கு காரணம்.

விளையாட்டு

பெரும்பாலான வீரர்கள் வலது கையைப் பயன்படுத்துவதால், இடது கை வீரர்களின் நகர்வுகளை எதிரணியினர் கணிப்பது சற்று சவாலாக இருக்கலாம். 

நகர்வு

சில ஆய்வுகள் இடது கை பழக்கம் கொண்டவர்களிடம் இரு கைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் திறன் காணப்படலாம் எனக் குறிப்பிடுகின்றன. 

ஒருங்கிணைப்பு

இடது கை பழக்கம் கொண்டவர்கள் அதிக படைப்பாற்றல் உடையவர்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் 2025ஆம் ஆண்டு வெளியான ஆய்வு, மற்றவர்களைவிட அதிக படைப்பாற்றல் கொண்டவர்கள்.

படைப்பாற்றல்

இடது கை பழக்கம் கொண்டவர்களுக்கும் இசை திறனுக்கும் தொடர்பு இருப்பதாக பழைய ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இருப்பினும் இசை திறமை என்பது கை பழக்கத்தை மட்டும் சார்ந்தது அல்ல.

இசைத்திறன்

மூளையின் வலது மற்றும் இடது பகுதிகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றத்தில் சில வேறுபாடுகள் இருக்கலாம். 

தொடர்பு

பெற்றோர் இடது கை பழக்கம் கொண்டவர்களாக இருந்தால் குழந்தைக்கும் அதே பழக்கம் ஏற்படும் என்பது கட்டாயமில்லை.

மரபணு

இடது கை பழக்கம் கொண்டவர்கள் எழுதுதல், வரைவது போன்ற செயல்களைத் தங்களுக்கேற்ற முறையில் கற்றுக்கொள்கிறார்கள்.

கற்றல்