1 Aug 2025

எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 11 அற்புத நன்மைகள்!

Credit: GETTY

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

நோய்எதிர்ப்பு

இது வயிற்றில் செரிமான அமிலங்களின் உற்பத்தியை தூண்டி உணவை எளிதில் செரிக்க வைக்கிறது. நெஞ்செரிச்சல், உப்புசத்தை குணப்படுத்தும்.

செரிமானம்

எலுமிச்சை சாறு உடலுக்கு தேவையான உடனடி புத்துணர்ச்சியையும் நீர்ச்சத்தையும் தாராளமாக வழங்குகிறது.

நீர்ச்சத்து

இதில் உள்ள பெக்டின் நார்ச்சத்து தேவையற்ற பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.

உடல்எடை

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் பருக்களை குறைக்கிறது.

சருமம்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கிறது.

சிறுநீரகம்

எலுமிச்சையின் நறுமணமும் சுவையும் மூளையை சுறுசுறுப்படையச் செய்து மன அழுத்தத்தை குறைக்கிறது.

புத்துணர்ச்சி

இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்து இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

இதயம்

வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து துர்நாற்றத்தை போக்கி புத்துணர்வான சுவாசத்தை தருகிறது.

வாய்நலன்

கல்லீரலில் தங்கியுள்ள நச்சுகளை வெளியேற்றி உறுப்புகளை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

நச்சுநீக்கம்