13 Jun 2025
Credit: Freepik
புடலங்காயில் நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால், செரிமானத்தை சீராக்கி அஜீரண பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
முருங்கைக்காயில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்தால் உடலுக்கு நல்ல பலன் தரும்.
பாதாமில் உள்ள நார்ச்சத்து ஜீரண மண்டலத்தை மேம்படுத்தி, உணவு எளிதில் செரிமானமாக உதவுகிறது.
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு அளவாக எடுத்துக்கொண்டால் பயன் தரும்.
அத்திப்பழம் குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்க உதவக்கூடியது.
கேரட் நார்ச்சத்து மிகுந்த காய்கறியாக இருப்பதால், உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்க உதவுகிறது.
கேரட்டை ஜூஸாகவோ உணவாகவோ எடுத்துக்கொண்டால், உடல் ஆரோக்கியம் மேம்பட்டு புத்துணர்ச்சி கிடைக்கும்.
காய்கறி சாலட்களை உணவில் சேர்ப்பது உடல்நலத்தை பாதுகாக்க, தினசரி சத்துக்களை இயற்கையாக பெற உதவுகிறது.
ஜூஸ் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கி, ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஆதரவாக இருக்கும்.
நார்ச்சத்து அதிகமான உணவுகள் செரிமானத்தை மேம்படுத்தி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குறைக்க உதவும்.