25 SEP 2026

 முடி கொட்டுவது குறையணுமா? இதை பண்ணுங்க!

Credit: Getty

உச்சந்தலையை சுத்தமாக வைத்திருப்பது முடியின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாகும்.

உச்சந்தலை

உங்கள் ஸ்கால்ப் தன்மைக்கு ஏற்ற இடைவெளியில் ஷாம்பு பயன்படுத்துங்கள்.

ஷாம்பு 

முட்டை, பால், பருப்பு, சோயா, கொட்டைகள், மீன் போன்ற புரத உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

புரதம் 

 இரும்புச்சத்து, வைட்டமின் D, B12 மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.

சத்துக்கள்

ஈரமான தலைமுடியை துணியால் அழுத்தமாக தேய்க்காமல் மென்மையாக கையாளுங்கள்.

ஈரம்

ஈரமான முடியில் அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தி, நுனியில் இருந்து மெதுவாக சீவுங்கள்.

சீப்பு

ஸ்ட்ரெய்ட்னர், கர்லிங் கருவி போன்ற அதிக வெப்ப சாதனங்களின் பயன்பாட்டை குறைக்கவும்.

வெப்பம்

அடிக்கடி ப்ளீச்சிங் மற்றும் ஹேர் கலரிங் செய்வதால் ஏற்படும் முடி சேதத்தை தவிர்க்கவும்.

ரசாயனம் 

போனிடெயில், கொண்டை அல்லது பின்னலை மிகவும் இறுக்கமாக போடுவதைத் தவிர்க்கவும்.

சிகைஅலங்காரம்

வழக்கத்தைவிட திடீரென அதிகமாக முடி உதிர்ந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் காரணத்தை கவனிக்கவும்.

முடிஉதிர்வு