14 AUG 2025
Credit: GETTY
சிறிய எள் விதைகளில் பாலில் உள்ளதை விட மிக அதிகளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
சீயா விதைகள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் அதிகளவு கால்சியத்தையும் அள்ளித் தருகின்றன.
சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபுவில் பாலுக்கு இணையான மற்றும் கூடுதல் கால்சியம் உள்ளது.
பருப்பு வகைகளிலேயே பாதாமில் தான் அதிகளவு கால்சியமும் ஆரோக்கியமான கொழுப்புகளும் உள்ளன.
பசலைக்கீரை, பிராக்கோலி மற்றும் பச்சை நிறக் கீரைகளில் ஏராளமான கால்சியம் சத்து அடங்கியுள்ளது.
உலர்ந்த அத்திப்பழத்தில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் அதிகளவு கால்சியம் காணப்படுகிறது.
மத்தி மீன்களின் மெல்லிய முட்களில் மனித உடலுக்கு எளிதில் உறிஞ்சக்கூடிய கால்சியம் உள்ளது.
வெள்ளை சுண்டலில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தும் அதிகளவு கால்சியமும் உள்ளன.
பாலில் இருந்து கிடைக்கும் தயிரில் பாலில் உள்ளதை விட எளிதில் செரிக்கும் கால்சியம் உள்ளது.
சிட்ரஸ் நிறைந்த ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி கணிசமான அளவு கால்சியமும் உள்ளது.