03 July 2026
Credit: Freepik
எலுமிச்சை பழ சாறில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சருமம் பளபளப்பாக இருக்க உதவி செய்யும்.
கிரீன் டீ அருந்துவது உடலில் வீக்கங்கள் குறையவும், பருக்கள் தோன்றுவதை தடுக்கவும் உதவி செய்யும்.
இளநீரில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட எலக்ட்ரோலைட்கள் நிறைந்துள்ளன. அவை சருமத்தில் நீர் சத்து குறையாமல் பாதுகாக்கும்.
இளநீர்
மாதுளை சாறு ரத்த ஓட்டத்தை சீராக்கும். சரும செல்களுக்கு ஆக்சிஜன் குறைவின்றி வழங்கி கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
கிரீன் டீ
பீட்ரூட் சாறு நச்சுக்களை நீக்கும் செயலில் கல்லீரலுக்கு உதவி செய்யும். புதிய செல்களை உருவாக்க உதவுவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
கற்றாழை சாறு வயிற்றுக்குள் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவும். அதுமட்டுமன்றி சிதைவுற்ற சருமத்தை சீராக்கும் தன்மை இதற்கு உள்ளது.
வெள்ளரி சாறு உடலுக்கு நீரேற்றமும், குளிர்ச்சியும் வழங்குவதில் முதன்மை பங்கு வகிக்கிறது. இது உப்பலான சருமத்தை சமநிலைப்படுத்தும்.
கேரட் சாற்றில் பீட்டா கரோட்டின் உள்ளது. அது உடலில் செல்லும்போது வைட்டமின் பி ஆக மாறி வயதான தோற்றத்தை குறைக்க உதவும்.
மஞ்சள் கலந்த பால் குடிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது முகப்பருக்களை நீக்கி தெளிவான சருமத்தை பெற உதவும்.
ஆரஞ்சு அதிக அளவு வைட்டமின் சி கொண்டுள்ளது. கொலாஜன் உற்பத்தி பெருகவும், சருமத்தில் கருப்பு திட்டுக்கள் மறையவும் இது உதவும்.