11 Dec 2025
Credit: Youtube
காமெடி காட்சிகளில் தனது இன்னசென்டான நடிப்பை, வெளிப்படுத்துவது, சென்டிமெண்ட் காட்சிகளில் உருகுவது, பஞ்ச் டயலாக் என பழைய ரஜினியை பார்க்கலாம்
இந்தப் படத்துக்கு நீலாம்பரி என டைட்டில் வைக்கலாம் என யோசிக்கும் அளவுக்கு வலுவான வில்லன் கேரக்டரை, பெரிய கண்களுடன் மிரட்டினார் ரம்யா கிருஷ்ணன்.
குறைவான காட்சிகளே வந்தாலும், படத்தின் சென்டிமென்ட் காட்சிகளில் தனது முதிர்ச்சியான நடிப்பின் மூலம் கூடுதல் வலு சேர்த்தார்.
ரஹ்மானின் ஒவ்வொரு பாடல்களும் பின்னணி இசையும் சேர்ந்து காட்சிக்கு காட்சி ரஜினியின் இமேஜை உயர்த்தியது.
காமெடி, சென்டிமென்ட், காதல், ஆக்சன், என சரியான விகிதத்தில் கலந்துகட்டி கே.எஸ்.ரவிக்குமாரின் திரைக்கதை படத்தில் மேஜிக் செய்தது.
மறைந்த நடிகை சௌந்தர்யாவுக்கு தமிழில் மறக்க முடியாத படமாக அமைந்தது.
போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான், தானா சேர்ந்த கூட்டம் என படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியின் பஞ்ச் தெறித்தது.
சூப்பர் ஸ்டார் சட்டையை கழட்டி வெறித்தனமாக சண்டைபோடும் கிளைமேக்ஸ் சண்டைகாட்சி உட்பட படத்தில் அனைத்து காட்சிகளும் சிறப்பாக அமைந்தது.
ரமேஷ் கண்ணாவின் லெட்டர் காமெடி, செந்திலின் பெண் பார்க்கும் காட்சி என காமெடி காட்சிகளும் ரகளையாக இருந்தது.
பொன்னியின் செல்வனில் நந்தினி கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு ரஜினிகாந்த் உருவாக்கிய கதை