16 Nov 2026
Credit: Pexels
பலரும் பளபளப்பான சருமத்தை பெற கடுமையாக போராடுகிறார்கள். இருப்பினும், சில உணவுகள் பெரிதும் உதவும்.
பாதாமில் உள்ள வைட்டமின் ஈ, சருமத்தை பொலிவூட்ட உதவுகிறது.
பப்பாளி சாப்பிடுவது இறந்த சரும செல்களை நீக்கி, சருமத்தை பொலிவுடன் வைக்கும்.
ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலாஜனை அதிகரித்து சருமத்தை பொலிவாக்கும்.
தக்காளியில் உள்ள லைக்கோபீன், சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தை பாதுகாக்கும்.
வெள்ளரிக்காய் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருப்பதால், சருமத்திற்கு பொலிவு கொடுக்கும்.
கீரையில் உள்ள இரும்புச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.
வால்நட்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும்.
சியா விதைகளை உட்கொள்வது சருமத்தின் ஈரப்பதத்தை பராமரித்து, பொலிவை மேம்படுத்தும்.
தினமும் அதிக அளவில் தண்ணீர் மற்றும் இளநீர் அருந்துவது உடலை நீரேற்றத்துடன் வைக்கும்.