24 July 2025
Credit: GETTY
பாஸ்டுரைஸ் செய்யப்படாத பால் மற்றும் பாலாடைக் கட்டிகளில் ஆபத்தான பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும்.
கிர்ணிப்பழத்தின் கரடுமுரடான வெளிப்புறத் தோலில் இருக்கும் கிருமிகள், அதை வெட்டும்போது கத்தியின் மூலம் உள்பகுதிக்குச் சென்றுவிடும்.
கடல்நீரை வடிகட்டி உணவை உட்கொள்ளும் இயல்புடைய சிப்பிகள், நீரில் உள்ள கிருமிகளையும் தங்களுக்குள் சேகரித்துக் கொள்கின்றன.
சமைக்கப்படாத மீன்களில் கண்ணுக்குத் தெரியாத அல்லது சிறிய வகை ஒட்டுண்ணிப் புழுக்கள் இருக்க வாய்ப்புள்ளது.
அடர்த்தியான பன்றி இறைச்சித் துண்டுகளை உட்பகுதி வரை முழுமையாகச் சமைப்பது கடினமான ஒன்றாகும்.
பச்சையான முளைக்கட்டிய தானியங்களில் உள்ள பாக்டீரியாக்களை வெறுமனே நீரால் மட்டும் கழுவி முழுமையாக அகற்ற முடியாது.
கடைகளில் முன்னரே நறுக்கி பாக்கெட்டுகளில் விற்கப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் எவ்வளவு நேரம் திறந்திருந்தன என்பது தெரியாது.
பாஸ்டுரைஸ் செய்யப்படாத பச்சையான முட்டைகளில் சால்மோனெல்லா பாக்டீரியா தொற்றுகள் இருக்க அதிக வாய்ப்புள்ளது.
இறைச்சியை அரைத்து ஹம்பர்கர் பேட்டி செய்யும் போது, மேல்பகுதியில் உள்ள கிருமிகள் இறைச்சியின் உள்பகுதி முழுதும் கலந்துவிடும்.
உணவுகளைத் தயாரிக்கும் போதும் சேமிக்கும் போதும் சரியான வெப்பநிலையைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.