மும்பையில் மஸ்கான் கப்பல் துறைமுக வளாகத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குவான் குங் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலானது நகரப் பகுதியில் உள்ள ஒரே சீன கோயிலாகும். குறைந்து வரும் சீன சமுதாயத்திற்கான கலாச்சார மையமாக இந்த கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த கோயிலானது போர், நீதி மற்றும் கோபத்தின் கடவுள் குவான் குங் மற்றும் கருணை தெய்வம் குவான் யின் ஆகியோருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.