நடிகை ராஷ்மிகா பான் இந்திய அளவில் , பல்வேறு மொழிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில், பெண்கள் ஒற்றுமையாக இருந்தால் என்ன நடக்கும் என, ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து பகிர்ந்த அவர், பெண்களுக்கு ஒரு தனி உணர்வு இருக்கிறது. ஒரு சூழ்நிலை சரியாக இருக்கிறதா, இல்லையா, என்பதை, அவர்களுடைய உள்ளுணர்வு சொல்லி விடும் என்கிறார். மேலும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பெண்கள் தங்களுடைய உணர்வுகளை கவனித்தால், அது உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லும், மனிதர்களையும், சூழ்நிலைகளையும், கண்களால் பார்க்காமலே உணர முடியும்.