ரயில் பயணத்தின் போது, பெண் ஒருவர், மின்சார கெட்டிலில் மேகி நூடுல்ஸ் சமைக்கும் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. வைரலாகும் வீடியோவில், ஒரு பெண் ரயிலில் இருக்கும் சாக்கெட்டில், மின்சார கெட்டிலை இணைத்து, மேகி நூடுல்ஸ் சமைத்துக் கொண்டிருக்கிறார்.