ரோமில் உள்ள லா சபீன்சா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்,வைஃபை சிக்னல்களை உடல் எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதன் மூலம், தனிநபர்களை அடையாளம் காண ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த அமைப்பு "ஹூஃபை" என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது கேமராக்கள், மைக்ரோஃபோன்கள்,அல்லது எந்த மின் சாதனத்தையும் சுமந்து செல்லும் நபர் இல்லாமலும் செயல்படுகிறது.