துபாயில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் பங்கேற்கும் விமான கண்காட்சி நவம்பர் 17, 2025 அன்று தொடங்கி, நவம்பர் 21, 2025 அன்று முடிவடைந்தது. இந்த நிலையில், கண்காட்சியின் கடைசி நாளன்று இந்திய விமானப்படையின் மிகவும் திறன் வாய்ந்த தேஜஸ் விமானம் வானில் சாகசம் நிகழ்த்தியது. அப்போது சோதனைக்காக இயக்கப்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. தரையில் மோதி விமானம் வெடித்ததில் அந்த பகுதியே அட்ந்த கரும்புகையால் சூழ்ந்தது.