அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் நடந்த ஒரு சிறிய விபத்து, உலக அளவில் பெரிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பூனை, ஒன்று கார் மோதி உயிரிழந்தது. இந்த பூனையின் மரணம் அங்குள்ள மக்களின் மனங்களை உலுக்கியது. காரணம் அந்த பூனையை மோதியது கூகுளின் சுய இயக்க வாகனமான, வேமோ ரோபோ டாக்ஸி. டிரைவர்கள் இல்லாம் சுயமாக இயங்கும் வாகனம் இது. இது சுய இயக்க வாகனங்களின் பொறுப்பு பற்றிய, மிகப் பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது.