இந்திய ரயில்வேயின் புதிய தலைமுறை வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில், தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகும் வாட்டர் டெஸ்ட் வீடியோ தான், அதற்கு காரணம். இந்த புதிய ஸ்லீப்பர் வந்தே பாரத், நீண்ட தூர இரவு பயணத்திற்காக, முழுமையாக வடிவமைக்கப்பட்ட ஹை ஸ்பீட் ரயில். பரந்த படுக்கைகள், வைஃபை, சார்ஜிங் பாயின்ட்ஸ், நவீன இன்டீரியர் என அனைத்தும் பிரீமியம் லெவலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது, இந்த ரயில் அதிகபட்சமாக, 180 கிலோ மீட்டர் வேகம் வரை ஓடியது. ஸ்டெபிலிட்டி, பிரேக்கிங் என அனைத்தையும் ரயில்வே அதிகாரிகள் வெற்றிகரமாக பரிசோதித்தனர்.