யானைகள் என்றாலே நம் நினைவிற்கு வருவது அவற்றின் அழகான சுட்டித்தனங்கள் தான். அதிலும் குட்டி யானைகள் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? அந்த வகையில், ஒரு குட்டி யானையை பெரிய யானை ஒன்று மீட்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 49 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ இதுவரை சுமார் 54,000 பார்வைகள் பெற்றுள்ளது. இந்த வீடியோவில், ஒரு குட்டி யானை குளத்திற்கு அருகே நின்றிருக்கிறது. அதன் அருகில் இருந்த பெரிய யானைகள் வேறு வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது, அந்த குட்டி யானை தவறுதலாக குளத்தில் விழுந்துவிடுகிறது.