தெலுங்கு திரைப்பட உலகில் மிகவும் பரவலாக பேசப்படும் ஜோடிகளில் முன்னிலையில் உள்ளவர்கள் நடிகர் விஜய் தேவேரகொண்டா மற்றும் நடிகை ரஷ்மிகா மந்தன்னா ஜோடி. இந்த ஜோடி, தங்களின் உறவை முதன்முறையாக பொதுவெளியில் வெளிப்படுத்தும் வகையில் ஒரு இனிய தருணத்தை பகிர்ந்து கொண்டனர். ரஷ்மிகாவின் சமீபத்திய திரைப்படமான ‘தி கேர்ல்ஃபிரெண்டு’ வெற்றிவிழாவில் இந்த நிகழ்வு இடம்பெற்று, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.