புதியதாக வாங்கப்படும் வாகனங்களை பதிவு செய்வதற்காக RTOக்கு நேரில் கொண்டு சென்று காண்பிக்க வேண்டிய கட்டாயத்தை போக்குவரத்துத் துறை நீக்கி உள்ளது. இதற்குப் பதிலாக, வாகன விற்பனையாளர்கள் நேரடியாக பதிவு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை Dealer Point Registration System என அழைக்கப்படுகிறது.