நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குநர் ராஜமௌலி இணையும் பிரம்மாண்ட படம் வாரணாசி குறித்த புதிய தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2027 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்பட்ட இந்த படம், தற்போது ஏப்ரல் 9, 2027 அன்று உலக அளவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.