அமெரிக்காவில் வசிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு நீரிழிவு நோய் அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், அவர்கள் நிராகரிக்கப்படலாம் என்று டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அரசாங்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் நாட்டின் பொது கட்டணத்தில் அதிகப்படியாக சுரண்டல்கள் ஏற்பட்டு, அமெரிக்காவின் வளங்களை வீணாக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.