மிகவும் அபாயகரமான கடல் உயிரினம் எனப்படும், போர்ச்சுகீஸ் மான் ஓவார் என்ற உயிரினம், வேல்ஸ் கடற்கரையில் காணப்பட்டதால், அப்பகுதிக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கடல் பாதுகாப்புப்படை, இது மிகவும் விஷமுள்ள உயிரினம் எனவும், மக்கள் இதனைத் தொட்டால் கூட கடுமையான விஷப்பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது. அபெரவோன் கடற்கரை போன்ற கடலோரப் பகுதிகளில்,இத்தகைய உயிரினங்கள் காணப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.