கர்நாடகாவில் தீபாவளிக்குப் பிறகு மாட்டு சாணத்தை எறிந்து கிராம மக்கள் தனித்துவமாக பண்டிகையைக் கொண்டாடுவது தொடர்பான புகைப்படம், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. கர்நாடகாவில் சாமராஜ்நகர் மாவட்டம் தலவாடி தாலுகாவில் உள்ள குமதபுர கிராமவாசிகள் தீபாவளிக்கு மறுநாளுக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். காரணம் தீபாவளி கொண்டாடி விட்டு மறுநாள் ஓய்வெடுக்க அல்ல. மாறாக, கோர் ஹப்பா எனப்படும் நூற்றாண்டுகள் பழமையான பசு சாணத் திருவிழாவை கொண்டாடத்தான். ஒவ்வொரு ஆண்டும், தீபாவளிக்கு அடுத்த நாள், அருகிலுள்ள கிராமங்களிலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கொண்டாட்டத்தைக் காண ஒன்று கூடுகிறார்கள்.