இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வீரர் திலக் வர்மா, அரிதான தசை நோயான ராப்டோமயோலிசிஸால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, 2022 ஆம் ஆண்டு எனக்கு ராப்டோமயோலிசிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இது தசை திசுக்களில் விரைவான சிதைவால் ஏற்படும் ஒரு அரிய, அதேசமயம் ஆபத்தான பாதிப்பாகும். விளையாட்டு விளையாடுபவர்கள், அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் போதுமான அளவு ஓய்வெடுக்கவில்லை என்றால் இந்த நிலையில் இருப்பதற்கான அதிக ஆபத்து உள்ளது எனவும் கூறப்படுகிறது.