பயண நினைவுகளை பொதுவாக செல்போன் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் காலத்தில், பழமையான தபால் தலை சேகரிக்கும் ஆர்வம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. பெங்களூருவில் உள்ள பொது தலைமை தபால் நிலையம் முன்பு, இந்திய அஞ்சல் துறையின் கர்நாடக அஞ்சல் வட்டம் வெளியிட்டுள்ள ‘பிலேட்லி பாஸ்போர்ட்’ வாங்குவதற்காக நூற்றுக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.