பெண்கள் ரெட் கலர் லிப்ஸ்டிக் போடும்போது, அவர்களுக்குள் ஒரு தனித்துவமான நம்பிக்கை, ஆற்றல் உருவாகும் என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. ஆய்வு முடிவுகளின் படி, இது முகத்தைக் கவனத்திற்குள் கொண்டு வரும் வண்ணம் என்பதால் உடலமைப்பு மற்றும் மனநிலை இரண்டிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எல்லா வண்ணங்களில் இருந்தும் சிவப்பு நிறம், மனிதனின் மூளையை அதிகமாக ஈர்க்கும் தன்மை கொண்டது. இது ஆரோக்கியம், சக்தி, ஆபத்தானத்தன்மை மற்றும் விரும்பத்தக்க தன்மையை மனதில் ஆன்மீக, உளவியல் ரீதியாகத் தூண்டுகிறது. மனிதர்கள் சுயமாக உணராமலும் நிறத்தைப் பற்றிய நல்ல கருத்தைப் பெறுகிறார்கள்.