உயரம் மூன்று அடி தான், எடை இருபது கிலோக்கு கீழ் தான் இருக்கும். இருந்தாலும், அவரது கனவு மட்டும், வானத்தைத் தொட்டிருக்கிறது. குஜாரத்தை சேர்ந்த கணேஷ் பரையா, தான் டாக்டராக வேண்டும் என்பது தான், அவரது சிறு வயது கனவு. கடந்த 2018 ஆம் ஆண்டு, அவர் எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பித்தபோது, கணேஷின் விண்ணப்பத்தை மெடிக்கல் கவுன்சில் நேரடியாக நிராகரித்தது.