அமெரிக்காவின் கொலராடோ மாநிலம் பிரெக்கன்ரிட்ஜில் நடைபெற்ற சர்வதேச பனிச் சிற்பப் போட்டியில் இந்திய அணி சிறப்பான சாதனை படைத்துள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த ஜஹூர் அகமது லோன் தலைமையில், சுஹைல் முகமது கான், மிருதுல் உபாத்யாய் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மேட் சீலி ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றனர்.