செயற்கை நுண்ணறிவு நம் வாழ்க்கையை பல வகையில் எளிதாக்கும் ஒரு கண்டுபிடிப்பாகும். இது பல விதங்களில் நமக்கு உதவி செய்கிறது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அது முற்றிலும் மாறுபட்டு தவறாக பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் ஒரு ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வாடிக்கையாளர், செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி கணினியை ஏமாற்றி முழு பணத்தையும் திரும்ப பெற்றுள்ளார். இது தொடர்பான X வலைதள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், இன்ஸ்டாமார்ட்டில் முட்டைகள் ஆர்டர் செய்த ஒருவர், அதில் ஒன்று மட்டும் உடைந்து போனது.