கடந்த ஆறு ஆண்டுகளில் பூமிக்கு அருகில் வரும் 'சூப்பர் மூன்' நிகழ்வு நேற்று வானில் தோன்றியது. இந்தியாவில் இது சூரிய மறைவுக்கு பின் இரவில் தெரிந்தது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் நிலவு பிரகாசமாக காட்சியளிக்கும். இது பூமிக்கு மிக அருகில் வரும்போது மிகவும் பிரகாசமானதாக தெரியும். இதனை சூப்பர் மூன் என்று வானியல் ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.பூமி - நிலவு இடையே சராசரி துாரம் 3.84 லட்சம் கி.மீ. இதில் அதிகமாக 4.06 லட்சம் கி.மீ குறைவாக 3.56 லட்சம் கி.மீ. துாரத்தில் இருந்து நிலவு, பூமியை சுற்றி வரும்.