இந்திய மரபும், நவீனத்துவமும் சேரும்போது, மணக்களுக்கு கூடுதல் அழகை சேர்க்கும் என்பதை நிரூபித்திருக்கிறது தொழிலதிபர் யஷ் பிர்லாவின் மகன், வேதாந்த் பிர்லா மற்றும் அவரது மணமகள் தேஜல் குல்கர்ணியின் திருமணம். கடந்த நவம்பர் 2 ஆம் தேதி, மும்பை மலபார் ஹில்லிலுள்ள பிர்லா இல்லத்தில் நடைபெற்ற இந்த விழா, வெறும் திருமணம் மட்டும் அல்ல, ஒரு கலாச்சாரமும் நவீனத்துவமும் இணைந்து உருவாக்கிய கொண்டாட்டம்.