தீபாவளி மற்றும் சத் பண்டிகைக்கு பயணிக்கும் பயணிகளின் பண்டிகை கூட்ட நெரிசலை நிர்வகிக்க நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், டிக்கெட் இல்லாத பயணிகளிடமிருந்து ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியதாக தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பயணிகள் எந்த சிக்கலும் இன்றி பயணம் மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.