மிகவும் விலையுயர்ந்ததாக ஒரு "தங்கக் கழிப்பறை" தற்போது ஏலத்திற்கு வர இருக்கிறது. இந்த அரிய கலைப்பொருளின் ஆரம்ப விலை, இந்திய மதிப்பில் சுமார் 83 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பறை 101.2 கிலோ தங்கத்தால் முழுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அரிய கலைப்பொருளை உருவாக்கியவர், இத்தாலிய கலைஞர் மாரிசியோ கட்டேலான்.