வழக்கமாக நம் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள வேறு இடத்திற்குச் செல்ல, பைக், கார், பேருந்து அல்லது ரயிலில் பயணம் செய்வது வழக்கம். ஆனால், ஹரியானாவில் ஒரு பெண் தனது வீட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது சகோதரனை தனது மகனின் திருமணத்திற்கு அழைக்க ஹெலிகாப்டரில் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.