சவூதி அரேபியாவில் கட்டப்பட்டு வரும் ஜெட்டா டவர், உலகின் மிக உயரமான கட்டிடமாக மாறும் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. 1,000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட இந்த கோபுரம், தற்போது சுமார் 80 மாடிகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது. 2025 ஜனவரியில் மீண்டும் தொடங்கிய கட்டுமானப் பணிகள், ஒவ்வொரு 3 முதல் 4 நாட்களுக்கும் ஒரு மாடி என்ற வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இதன் கட்டுமானம் 2028ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையாக முடிந்த பின், இந்த கோபுரம் 828 மீட்டர் உயரமுள்ள துபாயின் புர்ஜ் கலீஃபாவை விட 172 முதல் 180 மீட்டர் அதிக உயரம் கொண்டதாக இருக்கும்.