நடிகை சமந்தா ரூத் பிரபு தனது கணவர் ராஜ் நிடிமோருவுடன் போர்ச்சுகல் நாட்டில் ஹனிமூன் சென்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். டிசம்பர் மாதத்தில் லிஸ்பன் நகரத்தில் எடுத்த இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இருவரும் எடுத்துக்கண்டசெல்ஃபி, தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யும் காட்சி, காபி குடித்தபடி நகரக் காட்சியை ரசிக்கும் தருணங்கள் என பல அழகான தருணங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. குளிர்கால உடைகளில் சமந்தாவின் லுக் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த பதிவுக்கு இந்த டிசம்பர் எப்படி போனது என கேப்ஷன் வைத்துள்ளார் சமந்தா.