சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு இனி ஒரு நல்ல செய்தி. தீர்த்த யாத்திரை காலத்தில் வழங்கப்பட்டு வந்த புலாவும் சாம்பாரும் இனி இல்லையாம். அதற்குப் பதிலாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட இருக்கிறது. திருவிதாங்கூர் தேவசம் வாரியத்தின் தலைவர் கே. ஜெயகுமார், இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரது கூற்றுப்படி, புலாவும் சாம்பாரும் அன்னதானத்துக்கு சரியான உணவாக இல்லை. அதனால் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அன்னதான மெனுவாக, கேரள பாரம்பரிய உணவான சத்யா, பாயசம் மற்றும் அப்பளம் ஆகியவையாக மாற்றப்படுகிறது.