ரஷ்யாவில் உள்ள கல்லூரிகளில் இரண்டாயிரத்தி இருபத்தி ஆறாம் கல்வி ஆண்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கான உதவித் தொகையை ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னூறு மாணவர்களுக்கான உதவித் தொகையை அறிவித்துள்ளது. இந்த உதவித்தொகைகள் பல்வேறு துறைகளில் கல்வி பெறுவதற்கானவையாகும். அதன்படி, மருத்துவம், மருந்தியல், இன்ஜினீயரிங், கட்டிடக்கலை, விவசாயம், மேலாண்மை மற்றும் பொருளியல், சமூகவியல், கலை, விஞ்ஞானம், விண்வெளி, விளையாட்டு துறைகள் முதலியன உள்ளன. இந்த உதவித்தொகைகள் ரஷ்யாவில் உள்ள பல யுனிவர்சிட்டிகளுக்கு ஆனவையாகவும், இதில் லோமோன்சோவ் மாஸ்கோவ் ஸ்டேட் யூனிவர்சிட்டி மற்றும் எம்ஜிமோ யூனிவர்சிட்டி ஆகிய இந்த இரண்டு பல்கலைக்கழகங்களை தவிர மற்ற பல பல்கலைக்கழகங்கள் அடங்குகின்றன.