2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, கிரிக்கெட்டிலிருந்து முன்கூட்டியே ஓய்வு பெறலாம் என தீவிரமாக எண்ணியதாக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அஹமதாபாத்தில் நடைபெற்ற அந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது, தன்னிடம் இருந்த சக்தியையும் மன உறுதியையும் முழுவதுமாக சுரண்டிவிட்டதாக அவர் கூறினார்.