கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் (Bengaluru) பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி, ரூ.7.11 கோடி கொள்ளையடித்து தப்பிச் சென்றலால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூருவில் நவம்பர் 19, 2025 அன்று மதியம், இன்னோவா காரில் வந்த ஒரு கும்பல் ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்யச் சென்ற வாகனத்தை நிறுத்தி, ரூ.7.11 கோடியை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. ஜெயதேவா டெய்ரி சர்க்கிள் அருகே பணத்தை ஏற்றிச் சென்ற வாகனம், சவுத் எண்ட் சர்க்கிள் அருகே ஏடிஎம் (ATM) நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, குறுக்கிட்ட மர்ம நபர்கள் பாதுகாவலர்களைத் தாக்கி பணத்தைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.