2026 மார்ச் மாதத்திற்குள் ரூபாய் 500 நோட்டுகள் செல்லாது எனப்படும் என்ற தகவல்களை மத்திய அரசு தகவல் அலுவலகம் கடுமையாக மறுத்துள்ளது. இத்தகவல்கள் பொய்யானவை மற்றும் தவறாக வழிநடத்துபவை என PIB தெளிவுபடுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளியான பல பதிவுகளுக்கு பதிலளித்த PIBயின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவு, ரூபாய் 500 மதிப்புள்ள நோட்டுகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளது. “சில சமூக ஊடக பதிவுகளில், 2026 மார்ச் மாதத்திற்குள் ரூ.500 நோட்டுகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் என கூறப்படுகிறது.