இந்தியா ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக்குழு வரும் டிசம்பர் மாத கொள்கை அறிவிப்பில், இருபத்தி ஐந்து அடிப்படை புள்ளிகள் ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று மனி கண்ட்ரோல் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் நுகர்வோர் விலை குறியீட்டு பணவீக்கம் குறைந்ததே இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.