பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் வாங்கிய 50 ரூபாய் லாட்டரி டிக்கெட்டிற்கு 30 லட்சம் ரூபாய் முதல் பரிசு விழுந்துள்ளது. ஆனால், லாட்டரி குலுக்கல் முடிந்து பல நாட்கள் ஆகியும் அந்த வெற்றியாளர் இன்னும் பரிசைப் பெற வரவில்லை. பர்னாலா ரயில்வே நிலையம் அருகே லாட்டரி ஏஜென்ட் ஜெய்சங்கர் என்பவரிடம் விற்கப்பட்ட 'ராஜஸ்ரீ மாதாந்திர லொட்டரி' டிக்கெட்டிற்கு பிப்ரவரி 26 அன்று இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. லாட்டரி டிக்கெட்டில் வாங்குபவரின் பெயர் அல்லது தொலைபேசி எண் எதுவும் இல்லாததால், அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பதை ஏஜென்டால் கண்டுபிடிக்க முடியவில்லை.