மலையாள சினிமாவில், பெரும் அதிர்வை ஏற்படுத்திய, பிரணவ் மோகன்லால் நடிப்பில் வந்த டைஸ் ஐரே திரைப்படம் இப்போது ஓடிடியில் வெளியாகவுள்ளது. உலகளவில் 82 கோடி வசூல் செய்த இந்த பிளாக்பஸ்டர் திரில்லர் திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. ராகுல் சதாசிவன் இயக்கிய இந்த படம், ஆர்க்கிடெக்ட், ரோகன் ஷங்கர் என்பவரின் வாழ்க்கையைச் சுற்றி நகர்கிறது.