ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உதியாவில் உலகில் நம்மை சுற்றி நடைபெறும் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், ஹெல்மெட் அணியாமல் சென்ற நபர், அபராதத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள கடாயை எடுத்து தனது தலையில் கவிழ்த்துக்கொண்டுள்ளார். அது தொடர்பான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.