விமானத்திற்குள் ஏற்படும் ஒரு சிறிய தவறுக்கூட, அதில் இருக்கும் நூற்றுக்கணக்கானவர்களின் வாழ்க்கையை ஆபத்திற்கு கொண்டு சென்றுவிடும். அப்படி, இத்தனை ஆண்டுகளில், விமானப் போக்குவரத்துத் துறையானது, பயணிகளின் கவனக்குறைவான செயலால், நடுவானில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுத்த பல நிகழ்வுகளைக் கண்டுள்ளது. அப்படி, வாரணாசியிலிருந்து மும்பைக்குச் சென்ற ஆகாசா ஏர் விமானத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் மீண்டும் அனைவருக்கும் எமர்ஜென்ஸி கதவு என்பது எவ்வளவு முக்கியமானது என்பதையும், பயணிகள் ஏன் காரணமின்றி அவற்றைத் தொடக்கூடாது என்பதையும் நினைவூட்டியுள்ளது.