ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவையை 48 மணி நேரத்தில் 15 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் ஓபன் ஏஐ நிறுவனம் அமெரிக்க பாதுகாப்புத்துறை உடன் செய்துள்ள புதிய ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது. அந்த ஒப்பந்தத்தின் படி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாடல்கள் அமெரிக்க பாதுகாப்புத்துறையின் ரகசிய அரசு நெட்வொர்க்கில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.