கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு காலணி கடை, "ப்ரீமியம் ரக காலணிகள் வெறும் 1 ரூபாய்க்கு வழங்கப்படும்" என்ற விளம்பரத்தை வெளியிட்டது. இந்த விளம்பரத்தால் கவரப்பட்ட நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே கடையின் முன் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழல் உருவானது.