நொய்டாவில் வசிக்கும் ஒரு பெண் ஒருவர், இரவு நே ரயில் நிறுத்தத்தின் போது தனது தந்தையை சந்தித்த உணர்ச்சிமிகு தருணத்தை பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கரிமாலுத்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். டெல்லியில் இருந்து உதய்ப்பூர் பயணம் செய்துகொண்டிருந்த அவர், தனது சொந்த ஊர் ரயில் நிலையத்தில் வெறும் 2 இரண்டு நிமிடங்கள் மட்டும் ரயில் நின்று செல்லும் என்பதையும், அந்த நேரத்தில் அவரது தந்தை அவருக்கு சிற்றுண்டி கொண்டு வருவதாகவும் தெரிவிக்கிறார்.