நேபாளத்தில் நேற்று புதிதாக 100 ரூபாய் நோட்டை அந்நாட்டின் ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ளது. இதில், அந்த நாட்டின் வரைப்படத்துடன் இந்தியாவின் லிபுலேக், லிம்யாதுரா மற்றும் காலாபானி ஆகிய மூன்று பகுதிகள் இடம்பெற்றுள்ளது மீண்டும் எல்லை குறித்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த புதிய 100 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணியை சீன நிறுவனத்தின் வசம் நேபாள அரசு அளித்துள்ளது. அப்போதே நேபாளத்தின் பிராந்திய எல்லையை நீட்ட கோரும் செயற்கை விரிவாக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.